பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பேட்டை:
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்டு 2023-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது தொழிற்பிரிவுகளில் இன்னும் பயிற்சியாளர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாக இருப்பதால் நேரடி சேர்க்கை வருகிற 31-ந் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எனவே பயிற்சியில் சேர விரும்புவோர் அனைத்து, அசல் கல்விச் சான்றிதழ்கள் (8/ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ) சாதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, ஆகிய அனைத்து சான்றிதழ்களின் 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 5) ஆகியவற்றுடன் வருகிற 31-ந் தேதி நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, பெண்களுக்கு உச்சவயது வரம்பு இல்லை.
உதவி தொகை
அரசு ஐ.டி.ஐ.களில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி காலத்தில் தமிழக அரசால் மாதம் ரூ.750 வீதம் உதவி தொகை, மடிக்கணினி, மிதிவண்டி, ஆண்டுக்கு 2 சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடபுத்தகங்கள், வரைபட கருவிகள், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை, இலவச பஸ் பாஸ் மற்றும் சலுகை கட்டணத்தில் ெரயில் பாஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு முன்னணி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது.
இந்த தகவலை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் அருள் தெரிவித்துள்ளார்.