அரக்கோணம் நகராட்சியில் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

அரக்கோணம் நகராட்சியில் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு
x

அரக்கோணம் நகராட்சியில் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் நகராட்சியில் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,

அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டு விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைகளை வரன் முறைப்படுத்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story