நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சிக்கான காலக்கெடு நீட்டிப்பு


நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சிக்கான காலக்கெடு நீட்டிப்பு
x

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சிக்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தை நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக மாற்றும் வகையில் 50 தன்னார்வலர்களை தேர்வு செய்து நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சியை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் சமரச மையம் நடத்த உள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் புரிபவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற விரும்புவோர் அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ஏற்கனவே எந்த ஒரு தன்னார்வ நிறுவனத்திலும் நிர்வாக பொறுப்பில் இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த பயிற்சியின்போது புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோர் தொடர்பான இதர சட்டங்கள் மட்டுமின்றி தகவல் பெறும் உரிமைச்சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், சங்கங்கள் சட்டம் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு பின்பு சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு செயல்பாட்டாளராக விளங்க தேவையான அம்சங்கள் குறித்தும் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ள அங்கீகாரம் குறித்தும் விவரிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பயிற்சி பெற விரும்புவதாகத் தெரிவித்து கடிதம் ஒன்றையும் அதனுடன் அவரது கல்வித்தகுதி, தற்போதைய தொழில், தொடர்பு எண் மற்றும் முகவரி ஆகியவற்றை சமரச மையம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாலாஜா நகரம், அரியலூர் என்ற முகவரிக்கு சாதாரண அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story