மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 22ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளம் மூலம் அக்.3-ம் தேதி (இன்று) வரை தங்களின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் வரும் 6-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளத்தில் சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story