ஏலதாரர்கள் வருவாய் இழப்பை ஈடுகட்ட கால நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
கொரோனா காலத்தில் கோவில்கள் அடைக்கப்பட்டதால் ஏலதாரர்கள் வருவாய் இழப்பை ஈடுகட்ட கால நீட்டிப்பு செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா நோய்த்தொற்று காலங்களில் வார இறுதி நாட்களில் கோவில்கள் மூடப்பட்டதால், பொது ஏலம்-ஒப்பந்தப்புள்ளி தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்டு 36 நாட்கள் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் உரிமைதாரர்களுக்கு இழப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு 36 நாட்கள் கால நீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.மேலும், தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட இனங்களுக்கு மட்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும்.
தொகை முழுவதும் வசூல் செய்யப்படாத இனங்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டால் ஏற்படும் இழப்பிற்கு தொடர்புடைய அலுவலரே பொறுப்பாக்கப்படுவார். உரிம இனங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படும் நாட்கள் போக மீதமுள்ள நாட்களுக்கு கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு வழக்கமான பொது ஏலம்/ஒப்பந்தப்புள்ளி திறப்பிற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.