உதகையில் மலை ரயில் ஜூலை 30 வரை நீட்டிப்பு


உதகையில் மலை ரயில் ஜூலை 30 வரை நீட்டிப்பு
x

சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உதகை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.

இதனிடையே, கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் சேவை இயக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த மலை ரெயில் சேவை ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சீசன் முடிந்ததும் சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து மலை ரெயிலில் பயணிப்பதால், ஜூலை 30ந்தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மலை ரெயிலை இயக்க சேலம் ரெயில்வே கோட்டம் முடிவுசெய்துள்ளது.


Next Story