விஷ வண்டுகள் அழிப்பு


விஷ வண்டுகள் அழிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்னைமரத்தில் கூடு கட்டிய விஷ வண்டுகள் அழிப்பு

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு, சரல்விளையை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. இதை பார்த்த முருகேசன் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜீவன்ஸ் உத்தரவின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தென்னைமரத்தின் ஓலையில் இருந்த விஷ வண்டு கூட்டை தீ வைத்து அழித்தனர்.


Next Story