ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு


ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு
x

காரிமங்கலம் அருகே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி, அதில் மீன்களை புதைத்து அழித்தனர்.

தர்மபுரி

காரிமங்கலம்

காரிமங்கலத்தை அடுத்த கேத்தனஅள்ளி அருகே உள்ள சாவடியூர் பகுதியில் பண்ணைக்குட்டை ஒன்றில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாக தாசில்தார் சுகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் வளர்க்கப்படுவது உறுதியானது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரன் மூலம் குழி தோண்டி, அதில் மீன்களை புதைத்து அழித்தனர். மேலும் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை வளர்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story