குப்பை கிடங்கில் எரிந்த தீ அணைப்பு
குப்பை கிடங்கில் எரிந்த தீ அணைப்ப
நாகர்கோவில்,
நாகர்கோவில் வலம்புரிவிளையில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கில் குப்பைகள் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை குவியலில் கடந்த 29-ந் தேதியன்று மதியம் தீ பிடித்து பற்றி எரிந்தது. இதனைதொடர்ந்து கடந்த 4 நாட்களாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக நாகர்கோவில், திங்கள்சந்தை, கன்னியாகுமரி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க வீரர்கள் போராடினர். எனினும் தீயை அணைக்க முடியவில்லை.
5-வது நாளாக நேற்றும் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்ய குமார் தலைமையில், தீயணைக்கும் பணியில் வீரர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என மொத்தம் 50 பேர் ஈடுபட்டனர். மேலும் 3 பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பைகளை கிளறியும் தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்தது. சாரல் மழை பெய்து வரும் நிலையிலும் குப்பை குவியலில் ஏற்பட்ட தீ அணையாமல் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் குப்பை கிடங்கில் எறிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் முற்றிலுமாக அணைத்தனர்.
--------------