நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை கேட்டு மிரட்டல்; மேலாளர் தற்கொலை
நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை கேட்டு மிரட்டியதால் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
ஜீயபுரம்:
திருச்சி மாவட்டம், குழுமணி அருகே உள்ள ஏகிரிமங்களம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி(வயது 43). இவர் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் அதிபர் ஆறுமுகம் என்பவர் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் ரஜினியிடம் பணம் கேட்டுள்ளனர். மேலும் மல்லியம்பத்து கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர், தான் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை திருப்பித் தருமாறு ரஜினியிடம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ரஜினி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story