வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு; 2 பேர் கைது


வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு; 2 பேர் கைது
x

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ௨ பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் தர்மராஜ் (வயது 26). இவர் நேற்று மாலை கீழக்குடியிருப்பு பஸ் நிறுத்தம் எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த ஆண்டிமடம் சாத்தனப்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(40), திருவண்ணாமலை மாவட்டம் கண்டியகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(24) ஆகிய இருவரும், தர்மராஜை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தர்மராஜ் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் மணிகண்டன், ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story