பயணியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு:ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


பயணியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு:ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பயணியை மிரட்டி பணம், செல்போன் பறித்த ஆட்டோ டிரைவரை உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி

தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஒச்சானத்தேவர் (வயது 63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தேனி பழைய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில்பட்டி அருகே புறவழிச்சாலையில் சென்ற போது ஆட்டோ டிரைவர் மற்றும் அதில் இருந்த மற்றொரு நபர் ஆகிய இருவரும் சேர்ந்து ஒச்சானத்தேவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.10,850 மற்றும் செல்போனை பறித்தனர்.

பின்னர் அவரை நடு வழியில் இறக்கி விட்டுவிட்டு இருவரும் ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து கைது செய்ய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story