தொழிலாளியிடம் பணம் பறிப்பு
தொழிலாளியிடம் பணம் பறித்தவரை போலீசார் தேடி வருகிறார்கள.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி (வயது 52). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் நாகன்குளம் விலக்கில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கீழக்கருவேலன்குளம், நடுத்தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் முத்து சரவணன் (43) சவுந்தரபாண்டியிடம் செலவுக்கு ரூ.200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த முத்துசரவணன், கத்தியை காட்டி மிரட்டி, சவுந்தரபாண்டி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.120-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்து சரவணனை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story