செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிப்பு; 5 பேர் கைது


செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிப்பு; 5 பேர் கைது
x

நெல்லை அருகே செல்போன் செயலி மூலம் பழகி பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜெபசீலன் (வயது 40). இவரை மர்மநபர் ஒருவர் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொண்டு பேசி பழகி உள்ளார். இந்த நிலையில் அவர் ஜெபசீலனை சீனிவாசநகர் பகுதியில் தனியாக சந்திக்க அழைத்து உள்ளார். அதனை நம்பி சம்பவத்தன்று ஜெபசீலன் அங்கு சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்மநபர்கள் ஜெபசீலனை மிரட்டி ஜிபே மூலம் ரூ.47 ஆயிரத்து 500 மற்றும் சட்டைப்பையில் இருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெபசீலன் சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்து (23) மற்றும் 4 சிறுவர்கள் சேர்ந்து பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்தனர்.



Next Story