வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்து ரூ.93 ஆயிரம் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது


வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்து  ரூ.93 ஆயிரம் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது
x

கடலூர் பஸ் நிலையம் அருகே வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்து ரூ.93 ஆயிரம் பறித்த 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

உல்லாசத்திற்கு அழைப்பு

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 35 வயதுடைய வாலிபர். இவர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தனது நண்பருடன் கடலூர் பஸ் நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் அந்த வாலிபரை மறித்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளனர். உடனே அவர், தனது நண்பரை விட்டுவிட்டு, தனியாக சென்று திருநங்கைகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் அந்த வாலிபர், அங்கிருந்து புறப்பட்ட போது திருநங்கைகள் இருவரும் சேர்ந்து அவரிடம் இருந்த ரூ.93 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பணம் பறிப்பு

அதன்பேரில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் உள்ள மோகினி பாலம் அருகில் நின்று கொண்டிருந்த 2 திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கடலூர் முத்தையா நகரை சேர்ந்த சத்தியா என்கிற சந்தியா (வயது 30), நாகர்கோவில் அருகே இறைச்சிக்குளத்தை சேர்ந்த அஞ்சு என்கிற சுகின் (27) என்பதும், வண்டிப்பாளையம் வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்து ரூ.93 ஆயிரத்தை பறித்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் சந்தியா, அஞ்சு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.93 ஆயிரம் மீட்கப்பட்டது. வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்து திருநங்கைகள் பணம் பறித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story