டாஸ்மாக் பார் ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு
டாஸ்மாக் பார் ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு
கோவை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்தவர் வேலு (வயது 49). இவர் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் டாஸ்மாக் பாரின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மது குடிக்க பணம் தருமாறு வேலுவிடம் கேட்டனர். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்தததால் ஆத்திரமடைந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி வேலுவிடம் இருந்த ரூ.150-யை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து வேலு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறித்தது சொக்கம்புதூர் அய்யாவு பண்ணாடி வீதியை சேர்ந்த பெயிண்டர்கள் தீனதயாளன் (28), சொக்கம்புதூர் ஜீவாபாதையை சேர்ந்த தனராஜ் (27) மற்றும் கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த டேவிட் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.