குருங்குளத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
நாஞ்சிக்கோட்டை வழியாக குருங்குளத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தஞ்சாவூர்
நாஞ்சிக்கோட்டை;
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்துக்கு நாஞ்சிக்கோட்டை மருங்குளம் வழியாக ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பொதுமக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. மேலும் மருங்குளம், ஏழுப்பட்டி, வாகரக்கோட்டை, மின்னத்தூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த ஒரு பஸ்சை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கும் தஞ்சை பகுதியில் உள்ள கடைகளுக்கு வேலைக்கு செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.எனவே குருங்குளத்துக்கு நாஞ்சிக்கோட்டை மருங்குளம் வழியாக தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story