எள், மணிலாவுக்கு கூடுதல் விலை


எள், மணிலாவுக்கு கூடுதல் விலை
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள், மணிலாவுக்கு கூடுதல் விலை விவசாயிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு பருவத்தில் விவசாய விளைபொருட்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 4,500 நெல் மூட்டைகள் வந்தன. இதில் நெல் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.1,120 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,934 ஆகவும் இருந்தது. மணிலா ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.7,659 ஆகவும், அதிகபட்சம் ரூ.10,166 ஆகவும், எள் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.11,309 ஆகவும், அதிகபட்சம் ரூ.13,309 ஆகவும், உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.5,849 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,444 ஆகவும், பச்சை பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.4,669 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,260 ஆகவும் இருந்தது.

அதேபோல் நாட்டுக்கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.7,130 ஆகவும், அதிகபட்சம் ரூ.7,155 ஆகவும், உயர்ரக கம்பு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,400 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,500 ஆகவும், கேழ்வரகு ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,790 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,966 ஆகவும், மக்காச்சோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2,104 ஆகவும், அதிகபட்சம் ரூ.2,179 ஆகவும் இருந்தது. சிவப்பு சோளம் ரூ.2,809-க்கு விற்பனையானது.

இது தவிர கொள்ளு குறைந்தபட்சம் ரூ.3,288 ஆகவும், அதிகபட்சம் ரூ.5,929 ஆகவும், பனிப்பயிர் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.8,699 ஆகவும், அதிகபட்சம் ரூ.9,059 ஆகவும், தட்டைப்பயிர் குறைந்தபட்சம் ரூ.3,989 ஆகவும், அதிகபட்சம் ரூ.6,319 ஆகவும், துவரை ஒரு மூட்டை ரூ.3699 ஆகவும் இருந்தது. தேங்காய் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.4,400 ஆகவும், அதிகபட்சம் ரூ.5,680 ஆகவும் இருந்தது. அரகண்ட நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் 508 மெட்ரிக் டன் தானியங்கள் வந்து ரூ.1 கோடியே 37 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. எள் மற்றும் மணிலாவுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story