அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கண் மருத்துவர் பர்ஹான் சவுத் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவர் சிவசுப்ரமணியம், டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது வருகிற 8-ந் தேதி வரை உலக கண்தான சிறப்பு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. கண் அறுவை சிகிச்சை செய்வதில் வாணியம்பாடி அரசு மருத்துவமனை 2-வது இடத்தை பெற்றுள்ளது. அதனை முதல் இடத்திற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினர். மேலும் கண் தானம் செய்வதன் அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கி கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story