கள்ளக்குறிச்சியில்கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், டாக்டர் ஆர்.கே.எஸ் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவபாடப்பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உடலுக்கு அழிவு உண்டு, கண்களுக்கு அழிவு இல்லை.எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை கொடுத்துச் செல்வோம் கண்ணிரண்டை, கருணை இருந்தால் போதும், இறந்த பின்பும் கண்தானம் செய்யலாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு கச்சிராயப்பளையம் சாலை, காந்தி ரோடு, நான்குமுனை சந்திப்பு, சேலம் மெயின்ரோடு, கடை வீதி வழியாக சென்று மந்தவெளியில் முடிவடைந்தது.
பேரணியில் டாக்டர்கள் நேரு, செந்தில்குமார், ஆர்.கே.எஸ்.கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.