கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்
செய்யாறில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செய்யாறு
செய்யாறில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரிமா சங்க மாவட்ட ஆளுனர் எஸ்.மதியழகன் தலைமை தாங்கினார்.
செய்யாறு தாசில்தார் முரளி முன்னிலை வகித்தார்.
விழிப்புணர்வு ஊர்வலத்தை செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆற்காடு சாலை, காந்தி சாலை, மார்க்கெட் வழியாக பெரியார் சிலை வரை சென்றடைந்தது.
இதில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிரிதரன்பேட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளி, திருவோத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி, செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, விஸ்டம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.