திருச்சுழி தொகுதியில் கண்மாய் தூர்வாரும் பணி


திருச்சுழி தொகுதியில் கண்மாய் தூர்வாரும் பணி
x

திருச்சுழி தொகுதியில் கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி தொகுதியில் கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

தூர்வாரும் பணி

காரியாபட்டி தாலுகா எம். இலுப்பைக்குளம், எஸ். கடமங்குளம், நரிக்குடி ஒன்றியம், களத்தூர், கீழக்கொன்றைக்கும் ஆகிய கண்மாய்களை நீர்வளத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காரியாபட்டி தாலுகா எம்.இலுப்பைகுளம் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சுழி தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள கண்மாய்களை மேம்பாடு செய்ய தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்மாய் மேம்பாடு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாசன வசதி பெறும்

இதன் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கோடைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் இத்திட்டம் ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காரியாபட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், கண்ணன், பேரூராட்சி தலைவர் செந்தில், காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், டி.வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதீஸ்வரன், காரியாபட்டி விவசாய சங்க ஆத்மா குழு தலைவர் இலுப்பைகுளம் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story