கண் பரிசோதனை முகாம்
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண் பரிசோதனை முகாம்
நெல்லை:
நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் மத்திய அரசின் எரிபொருள் சேமிப்பு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கண் பரிசோதனை மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எரிபொருள் சேமிப்பு ஆராய்ச்சி நிறுவன பயிற்சியாளர்கள் கோபி கிருஷ்ணா, கண்ணன் ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உரையாற்றினர். மேலும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் புதிதாக வாகன ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க வந்தவர்கள், புதுப்பிக்க வந்தவர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றது. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பானுலட்சுமி பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கவின்ராஜ், கண் மருத்துவமனை சார்பில் முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம், உதவி மேலாளர் அகிலன், விழி ஒளி ஆய்வாளர் இந்திர சுந்தரி, பேச்சிமுத்து மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.