கண் பரிசோதனை முகாம்


கண் பரிசோதனை முகாம்
x

கண் பரிசோதனை முகாம்

திருநெல்வேலி

நெல்லை:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நெல்லை அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை டீன் (பொறுப்பு) எட்வின் தொடங்கி வைத்தார். ஊழியர்கள், மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் ஹரிவன்சன், கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உதவி மேலாளர் அகிலன், விழி ஒளி ஆய்வாளர் இந்திரசுந்தரி, பேச்சிமுத்து, கண் நல ஆலோசகர் தாசன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் சங்க உப தலைவர் டாக்டர் தனசீலன், கால்நடை ஊட்டச்சத்தியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் அருள்நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story