கண் பார்வை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் கண் பார்வை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சிதம்பரத்தில் நடைபெற்றது.
கடலூர்
அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் கண் பார்வை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். காஸ்மோ பாலிட்டன் சங்கத் தலைவர் பாண்டியன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சிவசம்பத், மாவட்ட துணை ஆளுநர்கள் தீபக், மதிவாணன், திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி அருகில் இருந்து தொடங்கிய பேரணியானது மேலவீதி உள்பட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பள்ளி வளாகத்தை மீண்டும் சென்றடைந்தது. இதில் மாவட்ட தலைவர்கள் கமல்கிஷோர், கிஷோர் செயின், கமல்போத்ரா செயின், மணிகண்டன், ராமச்சந்திரன், மனோகரன், லலித் மேத்தா, சங்க உறுப்பினர்கள் சுஜித், மகேஷ், டாக்டர் ரவி' அரவிந்தன், டாக்டர் சக்திவேல், மனோஜ்குமார், ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story