ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
திருவண்ணாமலை
ஆரணி
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.
தமிழக முழுவதும் வருகிற 17-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி, கல்லூரி பஸ் ஓட்டுனர்களுக்கும், ஓட்டுனர் உரிமம் பெற அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமில் வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை ஆலோசனை வழங்கினர்.
முகாமில் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் (ஆரணி) கருணாநிதி (செய்யாறு) மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் ராஜா, பழனி, சரவணன், நூர், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story