டிரைவர்களுக்கான கண் பரிசோதனை முகாம்
டிரைவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கரூர் மாவட்ட போலீசார் மற்றும் குளித்தலை போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது. முகாமை குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவரும் கண் பரிசோதனை செய்து கொண்டார். இந்த முகாமில் குளித்தலை வட்ட பகுதியைச் சேர்ந்த ஆட்டோ, வேன் கார் உள்பட பல்வேறு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். அதுபோல தங்களுக்குள்ள உடல் உபாதைகளை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், குளித்தலை போலீசார், பொதுமக்கள் பலரும் பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு உரிய ஆலோசனைகளை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வழங்கினார்கள். இதில் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாவுக்கரசு (போக்குவரத்து), காசிப்பாண்டியன் (சட்டம்-ஒழுங்கு), மங்கையர்கரசி (மகளிர்), சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.