கண் சிகிச்சை முகாம்
கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் மோகன்குமார், கவுரிசங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவிமதி முகாமை தொடங்கி வைத்தார். ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கண் டாக்டர் ராம்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு கண்சிகிச்சை அளித்தனர். முகாமில் கண் புரை அறுவை சிகிச்சைக்கு 35 பேரை தேர்வு செய்து, ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் நர்சுகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.