கோவை கோர்ட்டுகளில் முகக்கவசம் கட்டாயம்


கோவை கோர்ட்டுகளில் முகக்கவசம் கட்டாயம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை கோர்ட்டுகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை கோர்ட்டுகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

முகக்கவசம் கட்டாயம்

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள ஐகோர்ட்டுகள், கீழமை கோர்ட்டுகளில் நேற்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதையொட்டி கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள், மனுதாரர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிந்து கோர்ட்டுக்கு வர அறிவுறுத்தப்பட்டது. மேலும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும், அடிக்கடி கைகளை கழுவுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதன்படி கோவை, பொள்ளாச்சி, மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம் கோர்ட்டுகளுக்கு நேற்று ஊழியர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு, அதனை அணிந்து கோர்ட்டுக்குள் வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுகாதாரத்துறை அறிவுரை

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த பரவல், தற்போது 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 40-க்கும் மேல் பதிவாகிறது. தற்போது 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

இதை கட்டுப்படுத்த ஏற்கனவே மருத்துவமனைகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும் பஸ் நிலையங்கள், ரெயில்நிலையம், சந்தைகள், வணிக நிறுவனங்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. எனவே தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story