பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்


பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:11+05:30)

பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் பெண்கள் தைரியமாக எதிர் ெகாள்ள வேண்டும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் பெண்கள் தைரியமாக எதிர் ெகாள்ள வேண்டும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார்.

பெண் குழந்தைகள் தினம்

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கு கல்வி மாவட்ட அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரியங்கா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் அடிமையாக இருந்த காலம் மாறி விட்டது. பெண்கள் சுமையாக இருந்த காலம் மாறி எல்லா துறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்து உள்ளனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து உள்ளனர். மேலும் பெண் குழந்தைகளுக்கு அரசு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இதனால பெண்கள் குடும்பத்திற்கு சுமையாக இருக்காமல், அதை தாங்கி பிடிக்கின்றனர். சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டு பெண்கள் பயப்பட கூடாது. தைரியமாக இருந்து அவற்றை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு

இதை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது மாப்பிள்ளை ஜாக்கிரதை என்ற நோட்டீசு வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு பணியாளர்கள் சதாசிவம், புவனேஷ்வரி, சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story