சுற்றுலா இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்


சுற்றுலா இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்
x

சுற்றுலா இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

சுற்றுலா இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஐகோர்ட்டில் மனு

மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கும், குறிப்பாக குற்றால அருவிக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சுலபமாக செல்வதற்கு தேவையான வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் மெரீனா கடற்கரையின் அழகை அதன் அருகில் சென்று ரசிக்கவும், உணரவும் கடற்கரையில் நிரந்தர சாய்வுப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது.

நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளிடம் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. அனைத்து சுற்றுலா இடங்களையும் மாற்றத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

விசாரணை முடிவில், கேரளாவில் மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா இடங்களுக்கு சுலபமாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு நிபுணர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கருத்துகள் கேட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக செல்வதற்கு தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சுலபமாக சென்றடையும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகமும் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story