ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 13 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்


ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 13 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்
x

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: சந்தேகத்துக்குரிய 13 பேர் திருச்சி கோர்ட்டில் ஆஜர் 7-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு.

திருச்சி,

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் திட்டமிட்டனர். இதற்காக திருச்சியை சேர்ந்த சாமி ரவி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்கள் 13 பேரும் நேற்று காலை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 6-ல் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த ஆட்சேபனை இருப்பின் அதை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என்றும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி 13 பேரும் நேற்று காலை திருச்சி கோர்ட்டில் மாஜிஸ்திரட்டு சிவக்குமார் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள். அவர்கள் தரப்பில் ஆஜர் ஆன வக்கீல்கள், உண்மை கண்டறியும் சோதனை நடத்த, வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தான், அனுமதி கோரி மனு தாக்கல் செய்யமுடியும். ஆனால், துணை போலீஸ் சூப்பிரண்டு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்திவைத்த மாஜிஸ்திரேட்டு, அன்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மனு தாக்கல் செய்யவும், அன்று அனைவரும் ஆஜர் ஆகவும் உத்தரவு பிறப்பித்தார்.


Next Story