உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 229 வாகனங்களுக்கு அபராதம்


திருப்பூரில் 10 இடங்களில் திருப்பூர் தெற்கு, வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையின் காரணமாக உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 229 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூர்


திருப்பூரில் 10 இடங்களில் திருப்பூர் தெற்கு, வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையின் காரணமாக உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 229 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

10 இடங்களில் வாகன சோதனை

திருப்பூர் மாவட்டத்தில், கோவை சரக இணை போக்குவரத்து ஆணையர் எஸ்.கே.எம். சிவகுமாரன் உத்தரவுபடி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று காங்கயம் ரோடு, சின்னக்கரை, ஊத்துக்குளி, வீரபாண்டி பிரிவு, மங்கலம் ரவுண்டானா, பலவஞ்சிபாளையம், பழைய பஸ் நிலையம் உள்பட 10 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோ, மினி டெம்போ, ஆம்னி பஸ், வேன் உள்பட அனைத்து வாகனங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

229 வாகனங்களுக்கு அபராதம்

நேற்று ஒரே நாளில் 1,218 வாகனங்கள் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தகுதிச் சான்று இல்லாத 40 வாகனங்கள். வரி ஏய்ப்பு செய்த 8 வாகனங்கள், அனுமதி பெறாத 5 வாகனங்கள், செல்போன் பயன்படுத்தியது, இன்சூரன்ஸ், மற்றும் உரிய ஆவணமின்றி இயக்கி வந்த மொத்தம் 229 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகன ஆய்வில் எந்த ஒரு ஆவணம் இன்றி செயல்பட்டு வந்த 53 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல்வேறு பகுதிகளில் வாகன ஆய்வு நடத்தியதில், தகுதிச் சான்று இல்லாத வாகனங்களை இயக்கிய 217 வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இணக்க கட்டணம் மற்றும் வரியாக ரூ.16 லட்சத்து 21 ஆயிரத்து 800 அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கோவை சரகம் இணை போக்குவரத்து ஆணையர் எஸ்.கே.எம். சிவகுமாரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தனியார் பஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளுதல், அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிதல், உரிய முறையில் கட்டணங்கள் வசூல் செய்வது, புதிய வாகனங்கள் பதிவேற்றம் போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த், மற்றும் முருகானந்தம், பாலமுருகன், செந்தில் குமார், ஈஸ்வரமூர்த்தி, சிவகுருநாதன், ஜெயதேவராஜ், தியாகராஜன் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story