போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

பெரியதச்சூரில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூரில் ஒரு கிளினிக்கில் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசாரும், மருத்துவக்குழுவினரும் நேரில் சென்று கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விழுப்புரம் அண்ணாமலைநகரை சேர்ந்த செல்வசேகர்(வயது 51) என்பவர் சித்த மருத்துவத்தில் எலக்ட்ரோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டரான செல்வசேகரை போலீசார் கைது செய்தனர்.


Next Story