போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x

போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

செம்பட்டு:

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி தலைமை மருத்துவ அதிகாரி கோவிந்தநாதன் தலைமையில் திருச்சி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி வயர்லெஸ் ரோடு பகுதியில் மருத்துவம் செய்து வந்த புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பவரது மருத்துவ சான்றிதழை சோதனை செய்தனர். இதில் அந்த மருத்துவ சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story