போலி டாக்டர்கள் 2 பேர் கைது


போலி டாக்டர்கள் 2 பேர் கைது
x

ஓமலூர் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்

சேலம் மாவட்டம் ஓமலூர் கச்சேரி வீதி பகுதியில் தனியாக கிளினிக் நடத்தி மருத்துவம் பார்ப்பதாக கூறி அரசு ஆஸ்பத்திரி உதவி டாக்டர் சரண்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் ஓமலூர் போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மணிகண்டன் (வயது 38) என்பவர் நாட்டு வைத்தியம் செய்ததுடன், ஆங்கில வைத்தியமும் பார்த்ததாக தெரிகிறது. மேலும் அவர் நோயாளிகளுக்கு ஊசி போட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர். இதேபோல் சர்க்கரை செட்டிபட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (46) என்பவரையும் போலீசார் மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்ததாக கூறி கைது செய்தனர்.

அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் போலீஸ் நிலையத்திலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஒரே நாளில் 2 போலி டாக்டர்கள் கைதான சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story