ஏற்காடு பகுதியில்கள்ள துப்பாக்கிகளை தாமாக ஒப்படைப்பவா்கள் மீது வழக்கு கிடையாதுஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரி உறுதி


ஏற்காடு பகுதியில்கள்ள துப்பாக்கிகளை தாமாக ஒப்படைப்பவா்கள் மீது வழக்கு கிடையாதுஆலோசனை கூட்டத்தில் போலீஸ் அதிகாரி உறுதி
x
சேலம்

ஏற்காடு

ஏற்காடு பகுதியில் கள்ள துப்பாக்கிகளை தாமாக ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட மாட்டாது என்று ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அமல அட்மின் உறுதி அளித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஏற்காட்டில் 70 கிராமங்கள், 9 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் காப்பி விவசாய தொழிலாளர்கள். மலை கிராமங்களில் ஒருசிலர் கள்ள துப்பாக்கி வைத்துக் கொண்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலை கிராமங்களில் கஞ்சா விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களும் நடக்கின்றன என புகார் எழுந்தது.

இதனை தடுக்கும் வகையில் ஏற்காடு தனியார் கூட்ட அரங்கில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், 9 பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்குப்பதிவு கிடையாது

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசும் போது கூறியதாவது:-

ஏற்காடு மலை கிராமங்களில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு அவ்வப்போது தகவல் வருகிறது. நாங்கள் எவ்வளவுதான் ரோந்து சென்றாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் குற்ற செயல்களை தடுக்க முடியும். கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்து விட்டால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் கண்டுபிடித்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும். அதேபோன்று குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அவர்களது ரகசியம் காக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story