சேலத்தில்போலி நகையை அடமானம் வைத்து ரூ.4.10 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
சேலத்தில் போலி நகையை அடமானம் வைத்து ரூ.4.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலம்
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் மதியழகன். இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகை அடமான கடையில் மேலாளராக உள்ளார். இவர் அழகாபுரம் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் எங்கள் நிறுவனத்தில் அழகாபுரத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகைகளை அடமானமாக வைத்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் கடன் பெற்றார். பின்னர் அவர் கொடுத்த நகைகளை சோதனை செய்த போது அது போலி நகை என்பது தெரிந்தது. எனவே போலி நகைகளை வைத்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story