பெண் பக்தர்களை ஏமாற்றிய போலி சாமியார் தலைமறைவு


பெண் பக்தர்களை ஏமாற்றிய போலி சாமியார் தலைமறைவு
x

நாகர்கோவில் அருகே சாதாரண கற்களை மரகத கற்கள் என்று கூறி பெண் பக்தர்களிடம் பணம் மோசடி செய்த போலி சாமியார் தலைமறைவானார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே சாதாரண கற்களை மரகத கற்கள் என்று கூறி பெண் பக்தர்களிடம் பணம் மோசடி செய்த போலி சாமியார் தலைமறைவானார்.

சாமியார்

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சனத். இவரது மனைவி லாவண்யா. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுங்கான்கடை களியங்காடு அருகே உள்ள ஒரு குளத்தின் கரையில் வேலப்பன் மகன் சுரேஷ்குமார் மற்றும் ராமன் மகன் அசோக்குமார் ஆகியோர் நாகராஜா கோவில் வைத்து நடத்தி வருகிறார்கள். அவர்களில் சாமியாரான சுரேஷ்குமார் தன்னை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், டெல்லியில் வேலை பார்த்த போது ஆன்மிகம் மீதான ஈடுபாடு அதிகமானதால் ஊருக்கு வந்து கோவில் அமைத்து உள்ளதாகவும் என்னிடம் கூறினார்.

இதனை நம்பிய நான், எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அந்த கோவிலுக்கு சென்று தொடர்ந்து வழிபாடு செய்தேன்.

மரகத கற்கள் என கூறி மோசடி

அப்போது குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க தான் தரும் மரகத கற்கள் மற்றும் பச்சை மாணிக்க கல் ஆகியவற்றை அணிந்தால் போதும் என்று கூறினார்.

இந்த கற்கள் சாதாரண கற்கள் அல்ல. தனது கோவிலில் பாம்பு குடி கொண்டு இருப்பதாகவும், அந்த பாம்பு வாந்தி எடுத்ததில் உருவான கற்கள் என்றும் கூறினார். இதை நம்பி அவர் கூறியபடி அந்த கற்களை வாங்கினோம். மேலும் அவர் கூறியபடி தோஷ நிவர்த்தி செய்ய பூஜைகள் செய்ததுடன் அவர் கேட்டப்படி பணத்தையும் கொடுத்தோம். இதனால் பூஜைகளுக்காக எனது கணவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை விரயம் செய்தேன்.

இந்தநிலையில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் சம்பந்தப்பட்ட கற்களை நகை கடைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது அவை சாதாரண கற்கள் என்பது தெரிய வந்தது. இதற்கிைடயே அவர் எங்களிடம் இருந்து பல்ேவறு வகைகளில் ரூ.7.14 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இதுபோல் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்து உள்ளார். எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட இரணியல் போலீஸ் நிலையத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி போலி சாமியார் சுரேஷ்குமார், அவரது கூட்டாளி அசோக்குமார் ஆகிேயார் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த போலி சாமியார் தலைமறைவானார்.

மேலும் சம்பந்தப்பட்ட போலி சாமியாரால் யாராவது ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்களும் புகார் கொடுக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.


Next Story