ரெயில் நிலையங்களில் போலி டிக்கெட் விற்றவர் கைது


ரெயில் நிலையங்களில் போலி டிக்கெட் விற்றவர் கைது
x

ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு போலி டிக்கெட் விற்பனை செய்தவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை,

சென்னை சென்டிரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் போலியாக நோட்பேடில் 'சீல்' வைத்து டிக்கெட் எனக்கூறி ஒருவர் ஏமாற்றி வருவதாக பயணிகள் தரப்பில் புகார் எழுந்தது. இதையடுத்து, ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் தலையைில் தனிப்படை அமைத்து, ரெயில் நிலையங்கள், முன்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், சென்டிரல் மின்சார ரெயில் நிலையத்தின் முதல் தளத்தில் போலியாக நோட் பேடு, ரப்பர் ஸ்டாம்பு மற்றும் ஸ்டாம் பேடு ஆகியவையுடன் நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஜீதேந்திரஷா (வயது 38) என தெரியவந்தது.

இவர், சென்டிரல், பெரம்பூர், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் நோட் பேடில் சீல் வைத்து கொடுத்து, 'இதை எடுத்துச் செல்லுங்கள், எந்த டிக்கெட் பரிசோதகர்களும் எதுவும் சொல்ல மாட்டார்கள், இருக்கை ஒதுக்கி கொடுத்து விடுவார்கள்' என கூறியுள்ளார். இப்படி, போலியாக டிக்கெட்டுகளை ஒரு வருடமாக கொடுத்து ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story