மாடுகள் விலை வீழ்ச்சி
புதன் சந்தையில் மாடுகள் விலை வீழ்ச்சி அடைந்தது.
நாமக்கல்
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை நேற்று காலை வழக்கம்போல கூடியது. அப்போது திடீரென மழை பெய்தது. இதனால் அந்த சந்தை பகுதி சேறும், சகதியமாக காட்சியளித்தது. இதனால் மாடுகள், வியாபாரிகள், விவசாயிகள் அங்கு ஒதுங்க இடம் இன்றி தவித்தனர். மழையுடனே வியாபாரம் நடத்தினர். இதனால் நேற்று மாடுகளின் விலை குறைந்தது. மேலும் மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் கடந்த வாரம் ரூ.22 ஆயிரத்துக்கு விற்ற பசுமாடு நேற்று ரூ.19 ஆயிரத்திற்கும், ரூ.27 ஆயிரத்திற்கு விற்ற எருமை மாடு ரூ.24 ஆயிரத்திற்கும், ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற கன்று குட்டிகள் ரூ.9 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
Related Tags :
Next Story