கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:41 PM IST (Updated: 4 Aug 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சபரிவாசன் (வயது 10) த/பெ. சரவணன் மற்றும் யோகேஸ்வரன் (வயது 8), த/பெ.கணேஷ் ஆகிய இரண்டு சிறுவர்களும் நேற்று (3-8-2023) மதியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதலையும் எனது ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story