பெரம்பலூரில் யாதவர்களின் குடும்ப விழா; நாளை நடக்கிறது
பெரம்பலூரில் யாதவர்களின் குடும்ப விழா நாளை நடக்கிறது.
பெரம்பலூரில் தமிழ்நாடு யாதவ மகாசபை, பெரம்பலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் யாதவர்களின் குடும்ப விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் துறைமங்கலத்தில் உள்ள ஜே.கே.மகாலில் நடக்கிறது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட தலைவரும், ஸ்ரீஅம்மன் பேங்கர்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான என்.முத்தையா தலைமை தாங்குகிறார். இதில் மாநில தலைவரும், அமேட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் சரஸ்வதி மருத்துவ கல்லூரிகளின் நிறுவன தலைவருமான டாக்டர் நாசே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாவட்ட அவைத்தலைவரும், செட்டிகுளம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளருமான தமிழ்வாணன், பண்பாட்டுக்கழக செயலாளரும், மகாத்மா பப்ளிக் பள்ளியின் பொறுப்பாளருமான ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் யாதவர்களின் பண்பாட்டு ஊர்வலம் தொடங்குகிறது. இதில் மாநில தலைவர் ராமச்சந்திரன் யாதவிற்கு சிறப்பான வரவேற்பும், பிரம்மபுரீசுவரர் கோவில், மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில் பூர்ணகும்ப மரியாதையும் அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு சிக்னல், சங்குப்பேட்டை, மதனகோபாபுலம், வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்று விழா நடைபெறும் திருமண மகாலை அடைகிறது.