குடும்ப பிரச்சினை:முதியவர் விஷம் குடித்து சாவு
முதியவர் விஷம் குடித்து சாவு
கோயம்புத்தூர்
பேரூர்
தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையம், குப்புசாமி கவுடர் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது70). இவர், ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும், இவரது மகன் சிவக்குமார் (45) என்பவருக்கு, முதுகுத்தண்டு ஆபரேஷன் செய்ததாகவும், இவரது மகளுக்கு இருதய ஆபரேஷன் செய்ததாகவும், இதன் காரணமாக மருத்துவச் செலவு அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால், மனம் வெறுத்துப் போன சுந்தரம் வீட்டில் விஷம் குடித்து, வாந்தி எடுத்துள்ளார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story