குடும்பநல விழிப்புணர்வு முகாம்

எஸ்.புதூரில் குடும்பநல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆலோசனையின்படி நடைபெற்ற முகாமிற்கு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் விஜய்சந்திரன் தலைமை தாங்கினார். குடும்ப நல துணை இயக்குனர் தர்மர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் அர்ச்சனா அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் பதின்பருவ திருமணங்கள் மற்றும் இளம் வயதில் கர்ப்பமடைதலை தடுத்தல், ஒரு குழந்தை பிறந்த பின்னர் அடுத்த குழந்தைக்கான இடைவெளி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கான ஆரோக்கியம், குடும்ப பொருளாதாரம் கருதியும் குடும்ப கட்டுப்பாடு முறைகள் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. இதில் மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மதியரசு, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சூர்யா, எஸ்.புதூர் ஒன்றிய துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள், நர்சுகள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.