குடும்ப நல பயிற்சி முகாம்


குடும்ப நல பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப நல பயிற்சி முகாம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப நலம் குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமை தாங்கினார். சமுதாய நல செவிலியர் ரேவதி வரவேற்று பேசினார். இதில் வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி கலந்து கொண்டு பேசும்போது, கொரோனா காலத்தில் பெரும்பாலானவர்கள் குடும்ப நல விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. இதன் காரணமாக மக்கள் தொகை சிறிதளவு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாத்திரைகள் எடுத்து கொள்வது, ஆணுறைகளை பயன்படுத்துவது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது எளிமையானது. இதை செவிலியர்களும், அங்கன்வாடி பணியாளர்களும் இணைந்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்றார். இதில் சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story