அரசு பஸ்களில் கட்டணம் குறைப்பு


அரசு பஸ்களில் கட்டணம் குறைப்பு
x
தினத்தந்தி 1 Sept 2023 1:45 AM IST (Updated: 1 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சாதாரண கட்டணம்

வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம் மற்றும் கேரள மாநிலம் மன்னார்காடு ஆகிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த அரசு பஸ்களில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்வதற்கு ரூ.64 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது சாதாரண கட்டணம் என்ற பெயர் பலகையுடன் இயக்கப்படும் அரசு பஸ்களில் இனிமேல் கட்டணமாக ரூ.48 மட்டுமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விரைவு பஸ்கள்

அதே நேரத்தில், எஸ்டேட் பகுதிகளில் இருந்து அரசு விரைவு பஸ்களாக இயக்கப்படும் சாதாரண கட்டணம் என்ற பெயர் பலகை இல்லாத அரசு பஸ்களில் வழக்கம்போல் ரூ.64 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

செலவு குறையும்

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், வால்பாறையில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களே உள்ளனர். அவர்கள் அத்தியாவசிய தேவைக்காக பொள்ளாச்சிக்கு அடிக்கடி சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அரசு பஸ்களைத்தான் பெரும்பாலும் நம்பியுள்ளனர். இந்த சூழலில், கட்டண குறைப்பு என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதன் மூலம் எங்களது வழக்கமான போக்குவரத்து செலவு குறையும் என்றனர்.


Next Story