விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்


விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்
x

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள்

தஞ்சாவூர்

திருவையாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியரக நேர்முக உதவியாளர் கோமதிதங்கம் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தை பண்ணை கருவிகளை வழங்கி பேசுகையில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை கருவிகள் மற்றும் இதர இடுப்பொருட்களை விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து பயன்பெறலாம். ெநல்லுக்கு பின் உளுந்து சாகுபடி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஆடுதுறை 5, வம்பன் 8 ஆகிய ரகங்களின் சான்று பெற்ற உளுந்து விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தேசிய உணவு எண்ணெய் இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற சோயா விதைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. மண்வளத்தை காத்திடவும், குறைந்த காலத்தில் ஒரு நிறைந்த மகசூல் எடுத்திடவும் உதவும் சோயா மற்றும் உளுந்து சாகுபடியினை அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்து மண்வளத்தை காத்து அதிக பயன்பெற வேண்டும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, கிடங்கு கண்காணிப்பாளர் நித்தியா, உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், ஐஸ்வர்யா, அட்மா மேலாளர் ஜெயபிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story