பார்ம் இம்ளிமென்ட்ஸ் நிறுவனத்தின் விவசாய கருவிகள் விற்பனை மையம்


பார்ம் இம்ளிமென்ட்ஸ் நிறுவனத்தின் விவசாய கருவிகள் விற்பனை மையம்
x

பார்ம் இம்ளிமென்ட்ஸ் நிறுவனத்தின் விவசாய கருவிகள் விற்பனை மையம் தொங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இந்திய அரசின் அங்கீகாரம் செய்யப்பட்ட வேளாண்மை கிளஸ்டர் நிறுவனமான பார்ம் இம்ளிமென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் விதைக்கும் கருவி, உழவு கருவி, அறுவடை கருவி, கதிர்பிரித்தெடுக்கும் கருவி, நெல்அறுவடை எந்திரம், களை எடுக்கும் கருவி, புல்செதுக்கும் எந்திரம், வைக்கோல் பிரித்தெடுத்து அதனை படுக்கைபோல் சுற்றிவைக்கும் எந்திரம், கைதெளிப்பான், பவர் டில்லர், விசை தெளிப்பான் உள்ளிட்ட விவசாய கருவிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு தயாராகும் விவசாய பணிகளுக்கான பொருட்களை விற்பனை செய்வதற்கான விற்பனை மையம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம்- நான்குரோடு இடையே மலர் மருத்துவமனை அருகே நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் நிறுவன இயக்குனர்கள் வி.முருகேசன், நீலாம்பிகா குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, புதிய ைமயத்ைத ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, முதல்விற்பனையை தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட தொழில்மைய மேலாளர் செந்தில்குமார், வேளாண்மை அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி நேதாஜிமாரியப்பன், சென்னை எம்.எஸ்.எம்.இ. உயர்அலுவலர் சி.பி.ரெட்டி, திருச்சி சிட்கோ கிளை மேலாளர் பிரான்சிஸ் நோயல் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் விற்பனை மைய நிர்வாகிகள் பழனியாண்டி, ஜெகதீசன், தொழில்பேட்டையில் உள்ள தொழில் கூட்டமைப்பான பெரம்பலூர் பேப்ரிகேசன் இந்தியா கிளஸ்டர் நிறுவனத்தின் இயக்குனர்கள் பானுலேத் அமீர்பாஷா, லட்சுமணன் மற்றும் பார்ம் இம்ளிமென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில பங்குதாரர்கள், சிட்கோ உற்பத்தியாளர்கள் தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.


Next Story