நிதி நிறுவன ஊழியரை தாக்கிய விவசாயி கைது


நிதி நிறுவன ஊழியரை தாக்கிய விவசாயி கைது
x

நிதி நிறுவன ஊழியரை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர்

கரூர் கருப்பாயி கோவில் தெருவில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது 28). இவர் கரூரில் உள்ள ஒரு ஆட்டோ நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நெரூர் வடபாகம் சின்னகாளி பாளையத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ்பாபு (39) என்பவர் குடிபோதையில், ஆட்டோ நிதி நிறுவனத்திற்கு சென்று சம்பத்குமாரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு சம்பத்குமார் பணம் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்பாபு தகாத வார்த்தையால் சம்பத்குமாரை திட்டி மிரட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து சம்பத்குமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து, சுரேஷ்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story